![]() |
||
|
|
கீழக்கரையில் கல்வி உதவி கீழக்கரை தமுமுக சார்பாக மாணவ மாணவிகளுக்கு நோட்டுபுக் வழங்கும் நிகழ்ச்சி கீழக்கரை தெற்குதெரு ஜமாஅத் தலைவரும் சமூக புரவலருமான நல்ல முகம்மது களஞ்சியம் அவர்கள் தலைமையில் கிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாயா மேனிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் து.சாதிக், நகர செயலாளர் மனாசீர், துணை தலைவர் வாப்பாசா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக நகர தமுமுக தலைவர் முகம்மது சிராஜுதீன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அ அவர்கள் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான நோட்டு புத்தகங்களை கீழக்கரை அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 385 மாணவ மாணவிகளுக்கு வழங்கினார் மேலும் சைக்கிளில் வளையல் கவரிங் பொருட்கள் வைத்து வியாபாரம் செய்யும் தொழிலாளி ஒருவருக்கு இலவசமாக புதிய சைக்கிளை பொறியாளர் முகம்மது இர்பான், ஹசன் அ எம்.எல்.ஏ ஆகியோர் வழங்கினர். தமுமுக இமாம் ஹாஜி அ பைஜி சிறப்புரை ஆற்றினார். பழைய குத்பா பள்ளி ஜமாஅத் துணை செயலாளர் அகமது, கிழக்கு தெரு, தெற்கு தெரு, கடற்கரைப்பள்ளி, ஜமாஅத் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நகர துணை செயலாளர் சேகு ஜலால் நன்றி கூறினார். |
|
|
Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved. |
||