அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

கேள்வி: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் மற்றும் வக்ப் வாரிய தலைவர் ஹைதர் அலி குறித்து ஒரு வார இதழில் எழுதப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

 எம். ஹுசைன், சென்னை 34

பதில்: தமுமுக பொதுச் செயலாளர் மற்றும் வக்ப் வாரிய தலைவர் சகோதரர் ஹைதர் அலி அவர்கள் குறித்து ஒரு வார இதழில் எழுதப்பட்டுள்ளவற்றைப் படித்தோம். அதில் 2004 ஏப்ரல் 10க்கு பிறகு அவரைப் பற்றி எந்தவொரு குற்றஞ்சாட்டையும் ஜைனுல் ஆபிதீனால் எழுப்ப முடியவில்லை. சகோதரர் ஹைதர் அலி மீது குற்றச்சாட்டுகள் என்ற பெயரில் அவர் எழுப்பியுள்ள அவதூறுகள் அனைத்தும், தமுமுக தொடங்கப்படுவதற்கு முன்பும் ஜைனுல் ஆபிதீன் தமுமுகவில் இருந்த போதும் நிகழ்ந்தவையாகும் எனக் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது. ஜெய்னுல் ஆபிதீனின் கூற்று உண்மையாக இருக்குமேயானால் ஏன் அவர் மாநில அமைப்பாளராகவும் மூத்த தலைவராகவும் தமுமுகவில் இருந்த போதும், தமுமுகவிலிருந்து அவர் வெளியேறிய பிறகும் 9 ஆண்டுகள் ஏன் மவுனமாக இருந்தார்? சகோ, ஹைதர் அலி அவர்களை ஏன் முதலில் தலைமை நிலையச் செயலாளராகவும், பிறகு பொதுச் செயலாளராகவும் இருப்பதற்கு எப்படி அனுமதித்தார்?

தமுமுகவின் அமைப்பாளராக இருந்த ஜைனுல் ஆபிதீன் திடீரென்று ஒரு நாள் தான் பொது வாழ்வில் இருந்து விலகுவதாகவும், பொறுப்புகளிலிருந்து  விலகுவதாகவும், இனி மேடையேறி பேசப் போவதில்லை என்றும் மனம் திறந்த மடல் என்ற பெயரில் உணர்வில் பொது அறிவிப்பு செய்தார். அந்த மடலில் தமுமுகவின் பொதுச் செயலாளர் சகோதரர் ஹைதர் அலி உட்பட இன்றைய தமுமுக நிர்வாகிகள் குறித்து உணர்வு 5:6 அக்டோபர் 20-26, 2000 பக்கம் 12ல அவர் எழுதியவற்றில் இருந்து ஒரு பகுதியை இங்கே அüக்கிறோம்:

''தமுமுகவின் இன்றைய தலைமை நிர்வாகிகள் மீது நான் அதிருப் தியடைந்து ஒதுங்குவதாகவும் யாரும் நினைத்துவிட வேண்டாம். இன்று இருக்கின்ற தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்கும் உறுப்பினராக நான் இருப்பதே இதற்குச் சான்று.

மறுமையை முன்னிறுத்தி சமுதாய சீர்திருத்தத்துக்காக நானும் சேர்ந்து உருவாக்கிய தவ்ஹீது இயக்கத்தில் கூட, சுயநலனையும், பதவி மோகத் தையும், பணம் திரட்டும் குறிக்கோளையும் நான் காண்கிறேன். சம்பளம் இல்லாவிட்டால் அவர்கள் இப்பணியைச் செய்ய மாட்டார்கள் என்பதையும் உணர்கிறேன்.

ஆனால் உலகில் அடைய வேண்டிய உரிமைகளுக்காகத் துவக்கப்பட்ட தமுமுகவின் தலைமை நிர்வாகிகளிடம் அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த நிலையை நான் காண வில்லை.

மறுமைக்கான பணியைக் கூட சில பேர் இவ்வுலக ஆதாயத்துக்காக ஆக்கி விட்ட நிலையில் இவ்வுலகிற்காக மட்டுமே உரிய பணிகளை கூட இவர்கள் மறுமைக்காக ஆக்கிக் கொண்டதை நான் பார்க்கிறேன்.

தமுமுகவின் தலைமை நிர்வாகிகளில் எவருக்கும் இப்பொறுப்பைச் செய்வதற்காக மாத ஊதியம் இல்லை.

கூட்டங்களில் பேசச் சென்றால் அதற்காகக் கட்டணம் கேட்பதில்லை.

எந்த நேரத்தில் கதவைத் தட்டினாலும் சொந்த வேலையைப் புறந்தள்ளி விட்டு பிரச்சனைகளைத் தீர்க்கும் தியாக மனப்பான்மை.

எந்தப் பிரச்சனையை யாருக்கு முடித்துத் கொடுத்தாலும் அவர்களிடமி ருந்து எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராத தன்மை.

எத்தகைய மிரட்டலுக்கும் அடக்கு முறைகளுக்கும் அஞ்சாத துணிவு.

கலவரத் தீ மூண்ட நேரத்திலும் உயிரைப் பணயம் வைத்துச் சென்று களப் பணியாற்றும் பாங்கு.

தங்களை முன்னிறுத்தாமல் கழகத்தை முன்னிறுத்தும் அடக்கம்.

எந்தவொரு பிரச்சனை குறித்தும் கலந்து ஆலோசித்து அல்லாஹ்வின் திருப்தியையே குறிக்கோளாகக் கொண்டு முடிவெடுத்தல்.

சிறை செல்லும் நிலை ஏற்பட்டால் தங்களை முதலில் நிறுத்திக் கொள்ளக் கூடிய பொறுப்புணர்வு.

உணர்வுகளை தூண்டிவிட்டு குளிர்காய நினைக்காமல் சமுதாயத்தால் தாங்கிக் கொள்ளக் கூடிய முடிவு களை மேற்கொள்ளுதல்.

இப்படி சரியான தலைமைக்கு உரிய எல்லா பண்புகளையும் மாநிலத் தலைமை நிர்வாகிகளிடம் நான் காண்கின்றேன். தன்னலமற்ற இந்தத் தலை வர்களை வழங்கியதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

இதன் பிறகும் வேறு காரணங்களை யாரேனும் கற்பித்தால் மறுமை நாளில் அவர்களுக்கு எதிராக நான் அல்லாஹ்விடம் முறையிடுவேன்.''

இந்த நற்சான்றுகளை பி.ஜெய்னுல் ஆபிதீன் எப்பொழுது வழங்கினார்? இப்பொழுது 2008ல் அவர் ஹைதர் அலி மீது எழுப்பியுள்ள நிகழ்ந்ததாக சொல்லப் படும் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகுதான் இந்த மனம் திறந்த மடலில் நற்சான்றிதழ்களை அளித்துள்ளார்.

ஜைனுல் ஆபிதீன் இப்போது 2008ல் எழுதிய குற்றச்சாட்டுகளைத் தமுமுக வில் இருந்து வெளியேறும் போது குறிப்பாக ஏன் சுட்டிக்காட்டாமல் வெளியேறினார்? ஜைனுல் ஆபிதீனின் நேர்மையற்ற போக்கிற்கு அவர் எழுதியவை எடுத்துக்காட்டுகளாக அமைந்துள்ளன, நாமும் விரிவாக ஜைனுல் ஆபிதீன் எழுதியுள்ளவை அவதூறுகள்தான் என தோலுரித்துக் காட்ட முடியும், ஆனால் பல சமுதாய நலவிரும்பிகள் மக்கள் உரிமையின் பக்கங்களைப் புலம்பல் பேர்வழிகளுக்கு பதில் அளிப்பதற்கு வீணாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதினால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம்.

இருப்பினும் மக்களிடையே அவ தூறுகளை பரப்பியதற்காக ஜைனுல் ஆபிதீன் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.

 

உணர்வில் பி.ஜே எழுதிய மனம் திறந்த மடலைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.