![]() |
|||
|
|
தொண்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்
இராமநாதபுரம் (வ) மாவட்டம் தொண்டி தமுமுக கிளை சார்பில் அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. இந் நிகழ்ச் சிக்கு மாவட்டத் தலைவர் எம்.சாதிக்பாட்ஷா தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் கலந்தர் ஆசிக், மாணவர் அணிச் செயலாளர் பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். அதில் 32 நபர்கள் அறுவை சிகிச்சை செய்ய தேர்வு செய்யப்பட்டனர். |
|
|
|
Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved. |
|||