![]() |
|||
|
|
சிங்கப்பூரில் இரத்ததான முகாம்
சமூக ஒற்றுமை தழைத் தோங்கும் சிங்கப்பூரில், சிங்கப்பூர் இஸ்லாமிய சமுக மன்ற ஆதரவோடு மஸ்ஜித் ஜிமி சூலியா சார்பாக கடந்த ஜுன் 22 ஞாயிறு அன்று பென்கூலன் பள்ளிவாசலில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். சிங்கப்பூரில் உள்ள அனைத்து அமைப்பை சேர்ந்த தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதரர்களும் கலந்து கொண்டது சமுதாய ஒற்றுமையை பிரதிபலித்தது.
ஜாமியா சூலியா பள்ளி சார்பாக அதன் இளையர் பிரபு, தலைவர் சகோ. லத்தீப், சகோ. ஜியாவுதீன், சகோ. ஆசிப் மற்றும் சிங்கப்பூர் தமுமுக சகோதரர்களை தலைவர் சகோ. இலியாஸ், செயலாளர் சகோ. அன்பு அக்பர், செயற்குழு உறுப்பினர்கள் சகோ. காசிம், சகோ. திருப்பூண்டி நாசர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
தகவல்: சிங்கப்பூர் அக்பர்
|
|
|
|
Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved. |
|||