அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

தமிழக அரசியலில் புதிய திருப்பம்!

உதயமாகிறது மக்கள் முன்னேற்றக் கழகம்!

தமுமுக செயற்குழு பரபரப்பான முடிவு!!

திருப்புமுனையை ஏற்படுத்தும் நிகழ்வுகளில் ஒன்றாக நடந்து முடிந்திருக்கிறது தமுமுகவின் செயற்குழு கூட்டம்!

கடந்த ஜூலை 5 அன்று சென்னை மண்ணடியிலுள்ள எஸ்.எம்.எச் பேலஸில் அரசியல் வட்டாரத்தின் முழு கவனத்தையும் ஈர்க்கும் விதமாக தமுமுகவின் செயல்வீரர்கள் உற்சாகத்துடன் கூடினர்.
கடற்கரை சாலையிலும், மண்ணடிப் பகுதியிலும் கட்டப்பட்டிருந்த கொடிகள் பொது மக்களிடமும் ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காலை 11 மணிக்கு செயற்குழு தொடங்கியது. துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி அவர்களின் திருக்குர் ஆன் விரிவுரையோடு நிகழ்ச்சி தொடங்கியது.

அவரைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்கள் இடைக்கால செயல் அறிக்கையை வாசித்தார்.

அறிக்கை சமர்ப்பிப்பிற்கு பிறகு 'வக்பு வாரியத்தின்' செயல்பாடுகளை விவரித்தார். செய்து முடித்த பணிகளையும் செய்யவி ருக்கும் பணிகளையும் கூறியவர் பல பணிகளை செய்ய முடியாத காரணங் களையும் விளக்கி கூறினார்.

அதன் பிறகு தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் 2007 ஆகஸ்ட் 25 அன்று பாபநாசம் பொதுக்குழு தலைமை நிர்வாகத்திறகு அளித்த ஒப்புதல் அடிப்படையில், எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகளை விளக்கிப் பேசினார்.

தமுமுகவின் வழிகாட்டலில் உரு வாக்கப்பட்ட புதிய கட்சி குறித்து நவீன முறையில் விளக்கினார். புரஜக்டர் மூலம் வெண் திரையில் துல்லியமான விளக் கங்களை விவரித்தது அனைவரையும் ஈர்க்கும் விதமாக இருந்தது.

 புதிய அரசியல் கட்சியின் பெயர், கொடி
 தமுமுகவுக்கும்-புதிய அரசியல் கட்சிக்குமான உறவு
 நிர்வாக பொறுப்புகள்
 கட்சியின் செயல் வடிவம் ஆகியன குறித்து விளக்கப்பட்டது.
தொடர்ந்து லுஹர் தொழுகைக்காகவும் மதிய உணவுக்காகவும் இடைவேளை விடப்பட்டது.

மீண்டும் 3 மணிக்கு கூடிய செயற்குழு வித்தியாசமான சூழலை சந்தித்தது.

தமுமுக புதிய பிரச்சார பீரங்கியாக உருவாக்கப் பட்டிருக்கும் 'தமுமுக தலைமையிலே' என்ற ஒலிநாடா வெளியீட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இயக்கத்திற்காக உழைத்த மூத்தவரும், முதல் நிறுவன பொருளாளருமான நிஜார் அஹ்மத் அவர்கள் ஒலிநாடாவை வெளியிட, விழுப்புரம் மாவட்ட செயலாளர் முஷ்டாக் அதை பெற்றுக் கொண்டார்.

அதில் சுவராஸ்யமான பின்னணி இருந்தது. முதல் நாள் நடைபெற்ற உயர் மட்ட ஆலோசனை குழு கூட்டத்தில், யார் குறுந்தகடு பெற்றுக் கொள்வது என விவாதித்த போது, செயற்குழுவுக்கு வருகை தரும் பெயர்களை குலுக்கி அதில் ஒருவரை தேர்ந்தெடுப்பது என முடி வானது. அதன்படி விழுப் புரம் மாவட்ட செயலாளர் முஷ்டாக் குலுக்கல் மூலம் ஒலிநாடாவின் முதல் பிரதியை பெறும் வாய்ப்பை பெற்றார்.
உழைக்கும் தொண்ட னுக்கு தான் தமுமுக முன்னுரிமை கொடுக்கும் என்பது மீண்டும் நிருபிக்கப் பட்டது என மகிழ்ச்சியோடு மாவட்ட நிர்வாகிகள் கூறினர்.

தொடர்ந்து கோவை பிரச்சாரக்குழு சார்பில் குறுந்தகட்டிலிருந்து மூன்று பாடல்கள் பாடப்பட்டது. அதன் பிறகு பாடல் தயாரிப்புக்குழுவிற்கு தலைமை சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் செயற்குழு அரசியல் ஆய்வின் பக்கம் திரும்பியது. புதிய அரசியல் கட்சியாக மக்கள் முன்னேற்றக் கழகத்தை உருவாக்குவது என்றும், கறுப்பு வெள்ளை கறுப்பு அதன் கொடி வண்ணமாகவும் இருக்கும் என்றும் மிகுந்த உற்சாகத்திற்கு இடையே அறிவிக்கப்பட்டது.

அரசியல் கட்சித் தொடக்கத்தை பிரம்மாண்டமாக நடத்துவது என்றும், நிர்வாகப் பொறுப்புகளை தமுமுக தலைமை நிரப்பும் என்றும் இறுதி முடிவெடுக்கப்பட்டு, தொடர்ந்து தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய அத்தியாயத்தை படைக்கும் ஆவலில் பழைய படையை காக்கும் திட்டத்தில் மிகுந்த நம்பிக்கையோடு கலைந்தனர்? மீண்டும் திரள்வதற்காக!

 

 

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.