அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

திருவண்ணாமலை காந்தபாளையத்தில்
 இலவச கண் சிகிச்சை முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் போகலூர் ஒன்றியம் காந்தபாளையம் கிளை தமுமுக சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் 28.06.08 அன்று நடைபெற்றது. திருவண்ணாமலை ஸ்ரீரமண மகரிஷி கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இம்முகாமிற்கு நகர தமுமுக தலைவர் அக்பர் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் முகாமை துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் அமானுல்லாஹ்கான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ஜமாஅத் பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முகாமில் 106 பேருக்கு சிகிச்சை செய்யப்பட்டது. அவர்களில் 16 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு திருவண்ணாமலை கண் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
 

 

 

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.