![]() |
||
|
|
சிங்கள ராணுவம் அடாவடித்தனம் மத்திய அரசு மெத்தனம்
இலங்கை கடற்படை ராணுவம் சுட்டு தமிழக மீனவர்கள் உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. வேதாரண்யம் அருகே உள்ள ஆறு காட்டுத்துறையைச் சேர்ந்த முரளி (வயது 21), நாராயண சாமி (21) வாசகன் (27) ஆகியோர் சேது சமுத்திர கால்வாய் தோண்டும் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் வருவதைக் கண்டதும் அவர்கள் கையை உயர்த்தியுள்ளனர். சற்றும் கூட யோசிக்காமல் ராணுவத்தினர் சரமாரி யாக சுட்டுள்ளனர். இதில் வாசகன், நாராயணசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். கையில் குண்டு காயங்களுடன் உயிர் தப்பிய முரளி செல்போன் மூலம் தகவல் தர, பின்னர் முரளியுடன், இருவர் பிணமாக கரை சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இந்தச் சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை 1.30 மணியளவில் இலங்கை ராணுவம் சுட்டுள்ளது. வாசகன் உடலில் மட்டும் 20க்கும் மேற்பட்ட குண்டுகள் பாய்ந்துள்ளன. படகில் 21 குண்டுகள் துளைத்திருக் கின்றன. இலங்கை ராணுவம் தமிழக கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்துள் ளது தெளிவாகத்தெரிகிறது. வந்தவர் களின் நோக்கம் தெளிவாக விளங்கி விட்டது. மீனவர்களை சுட்டுக் கொன்றது மட்டுமின்றி வலைகளை அறுத்ததும், படகினை சுட்டு சேதப்படுத் தியதும் உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. சேது சமுத்திரக் கால்வாய் பகுதியில் தான் மீன் பிடித்துக் கொண்டி ருந்துள்ளனர். சேது சமுத்திர கடல் எல்லைக்குள் சிங்கள ராணுவத்தினர் ஏன் அத்துமீறி நுழைய வேண்டும். சேது சமுத்திரக் கால்வாய் இந்திய நலனுக்காக தோண்டப்படுகிறது. அதனை ஏற்கெனவே சிங்கள அரசு விரும்பவில்லை. அந்த ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ளவே சிங்கள ராணுவம் இந்த வெறியாட்டம் போட்டிருக்க வேண்டும். இதுபோன்ற கொலை வெறிச் சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடந் துள்ளன. ஒவ்வொரு நாட்டிற்கும் குறிப்பிட்ட தூரம் வரை கடல் எல்லை உள்ளது. அத்துமீறி அந்நிய நாட்டு கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடிப்பது குற்றமே. சில நேரங்களில் படகுகள் வழி தவறி விடுவதும் உண்டு. சில நேரங்களில் மீனவர்கள் தவறிழைப்பதுமுண்டு. இது போன்ற எல்லை கடந்து செல்லும் இந்திய மீனவர்களை பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் கூட கைது செய்கின் றன. பின்னர் அவர்கள் பரஸ்பர நல்லெண்ணத்திலோ, கைதிகள் பரிமாற் றத்திலோ விடுவிக்கப்படுகின்றனர். பாகிஸ்தான், பங்களாதேஷ் ராணுவங்கள் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உயிருக்கும் பொருளுக்கும் சேதம் விளைவிப்பதில்லை. ஆனால் ஒரு சுண்டைக்காய் நாடு சுட்டு விட்டு சுதந்திரமாக திரும்பிச் செல்கிறது. தமிழக அரசு இந்த அக்கிரமத்தை மத்திய அரசிடம் பலமுறை எடுத்துக் கூறியுள் ளது. 2000 கி.மீ தாண்டி நடக்கும் மீனவர் படுகொலை தில்லியிலோ, நாடாளு மன்றத்திலோ சூடு கிளம்பும் என்று எதிர் பார்க்க முடியாதுதான். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1974ல் தமிழக பகுதிக்கு சொந்தமான கச்சச்தீவினை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தார். அந்தக் கச்சத்தீவில் தான் தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்தியும் ஓய்வெடுத்தும் வந்தனர். அப்போது இருந்த அரசும் தமிழக மீனவர்கள் பற்றி அக்கறை கொண்டிருக்க வில்லை. தற்போதைய அரசுக்கும் அக்கறையிருப்பதாக தெரியவில்லை. அமெரிக்க அரசு தூண்டிவிடும் அணு ஒப்பந்தப் புழுவுக்காக வாய் பிளக்கும் மத்திய அரசு, தமிழக மீனவர்களின் உயிரிழப்பு பற்றி கண் திறப்பதில்லை. கச்சத்தீவினை மீண்டும் தங்களுக்கு மீட்டுத் தரவேண்டும் என்றும் தமிழக மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது கூட சிங்கள வெறியர் களை சினமூட்டியிருக்கும். ஈழத் தமிழ் பிரச்சனையில் இரட்டை வேடம் போடும் சிங்கள அரசு, விடுதலைப் புலிகளை கொல்வதாக கூறி அப்பாவி ஈழத் தமிழர்களை கொன்று வருகிறது. இருந்த போதும் இந்திய அரசு ரகசியமாக இலங்கைக்கு ராணுவ தளவாட உதவி களை செய்து வருவது கண்டு பிடிக்கப் பட்டது. தமிழ்நாட்டில் இருந்து பெரும் அளவில் கண்டனங்கள் எழுந்தன. புது தில்லியில் வந்து நல்ல பிள்ளையாக நடந்து கொள்ளும் இலங்கை ஆட்சியா ளர்கள் தமிழக மீனவர்கள் படுகொலை களுக்காக தங்கள் ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. இந்திய அரசும் முறையான கண்டனங்கள் தெரிவிப்பதில்லை. தற்போது மைய அரசில் அணு ஒப்பந்த சர்ச்சை காரண மாக குளறுபடிகளும் நிலையற்றத் தன்மையும் காணப்படுகிறது. இந்த சூழலில் மீனவர்கள் படுகொலை பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தப்போவதில்லை. மாநில அரசு வழங்கும் நிவாரண உதவிகள், அடுத்தடுத்து கொலைகள் நடவாமல் தடுக்கும் முயற்சிக்கானதும் அல்ல. இந்நிலை தொடருமானால் தமிழக மீனவர்களை காக்க ஒரு கடல் போரை பொது மக்களே நடத்தும் அளவுக்கு போய் விடும் என எச்சரிக்கிறோம்.
இந்திய அரசு தமிழக மீனவர்களை பாதுகாக்க
இந்திய கடற்படையைக் கொண்டு 'மீனவர்கள் பாதுகாப்பு படை' ஒன்றை உருவாக்க
வேண்டும். இந்தப் படை மீனவர்கள் எல்லைத் தாண்டாமலும் பார்த்துக்
கொள்வார்கள். எல்லை தாண்டி வந்து அக்கிரமம் புரியும் சிங்கள
ராணுவத்தையும் ஒரு கை பார்ப்பார்கள். வட எல்லையில் பாகிஸ்தான் ராணுவமும்
கடல் எல்லையில் சிங்கள ராணுவமும் இந்திய மக்களை பலி கொண்டு வருவதை
இந்திய ராணுவம் படை கொண்டு தடுக்க வேண்டும். |
|
|
Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved. |
||